சூரிய சக்தியினால் தன்னிறைவு பெற்ற இலங்கை

சூரிய சக்தி யுத்தத்தில் முன்னேற்றமான மாற்றம் “சூரியபல சங்ராமய” 20 வருட ஒப்பந்த காலத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டத்தின் மூலம் நீங்களும் ஒரு மின்சார உற்பத்தியாளராக முடியும். ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிக வருமானம். மின்சார பாவனையாளராகவும் மின் உற்பத்தியாளராகவும். இத்திட்டத்தின் பிரதான நோக்கம் 20% குறைவான வருமானமுடைய குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தல் ஆகும். இதனால் குறைவான வருமானமுடைய 2 லட்சம் குடும்பங்கள் நவீனமுறையின் கீழ் மின்சார உற்பத்தியாளர்களாக உருவாக்கப்படுவர்.

நாளையதினத்தில் உங்கள் வீடும் ஒரு சூரிய மின் உற்பத்தி நிலையம்.

உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

  • நீங்கள் தெரிவு செய்யும் முறைக்கு அமைவாக மின்சார கட்டணத்திற்காக செலவிடும் பணத்தை முழுமையாக சம்பாதிக்கலாம்.
  • 7வருடங்கள் வரை மீள் செலுத்தும் முறைமையின் கீழ் செயல்படுத்தப்படும், அரச மற்றும் தனியார் பிரிவின் வணிக வங்கி பலவற்றிலிருந்து சூரிய பெனலினை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் கடன் வசதிகள்.
  • சூரிய பெனலினை கொள்வனவு செய்ய நீங்கள் கடன் தொகையை பெற்றுக்கொண்டால் நீங்கள் ஈட்டும் இலாபத்திலிருந்து சூரிய பெனலினை கொள்வனவு செய்ய செலவு செய்த கடன் தொகை மற்றும் வட்டியினை செலுத்த முடிவதுடன், மேலதிக வருமானத்தையும் பெறலாம்.
  • நீங்கள் அதிகபடியாக உற்பத்தி செய்யும் மின் அலகு ஒன்றிற்கு முதல் 7 வருடங்கள் ரூ. 22.00/= ம் 8வது வருடம் முதல் ரூ 15.50/= வருமானமாக பெற்றுக்கொள்ளலாம்.

 

நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள்

  • சூரிய சக்தி இலவசமாக கிடைக்கும் மின்சக்தி என்பதால், மின்சக்திக்காக (எரிபொருள் மற்றும் நிலக்கரிக்கான) தற்போது செலவிடும் அந்நியச் செலாவணியை குறைக்கலாம்.
  • சுற்றுச்சூழல் பாதிப்படைதலை கட்டுப்படுத்தலாம் மற்றும் அணு மின்னிலைய மின் உற்பத்தியினால் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயு அளவை வருடத்துக்கு 150,000 மெ.டொ வரை குறைக்கலாம்.
  • மின் கட்டமைப்பின் சமனிலையை பேணுவதற்கு இலகுவாகுதல்.
  • மின்சாரத்தை கடத்துதல் மற்றும் விநியோகித்தல் சேதத்தை குறைக்கலாம்.
  • தற்போது பாரியளவில் வியாபாரிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட மின் உற்பத்திக்கு அனைத்து மக்களையும் தொடர்பு படுத்த முடியும்.
  • நாடு முழுவதிலுமுள்ள சிறிய அளவிலான மின் உற்பத்தி நிலைய கட்டமைப்பு இருப்பதினால் தேசிய மின்சாரத்தை பாதுகாத்தலானது சாதகமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • பாவனையாளர்கள் பாரிய அளவிலானோர் மின் உற்பத்தியாளர்களாவார்கள் என்பதால் மின் உற்பத்தியினால் கிடைக்கும் இலாபத்தில் நாட்டின் இலாப பங்கீட்டின் ஏற்றத்தாழ்வு குறையும்.
  • 2025 ம் ஆண்டில் தேசிய மின்சார கட்டமைப்பிற்கு 1000 மெ.வோ மின்சாரம் கிடைக்கும்
  • இத்துறையில் ஏற்படும் விழிப்புணர்வு நேரடியாக மற்றும் மறைமுகமாக புதிய வேலை வாய்ப்பினை பாரியளவில் உருவாக்கும்.

உங்கள் மின்சார பாவனைக்கு அமைய, உங்கள் விருப்பம் மற்றும் அனுகூலத்திற்கு அமைய பின்வரும் திட்டங்களில் ஒன்றை தெரிவு செய்யலாம்.

1

வீட்டுக்கூரையில் இணைக்கும் சூரிய பெனலினால் உற்பத்தி செய்யப்படும் மின் அலகுகள், பாவனை செய்யும் மின் அலகுகளுக்கு குறைவாக இருப்பின் அந்த வேறுபாட்டிற்கு மாத்திரம் மின்சார சபைக்கு பணம் செலுத்துதல், உற்பத்தி செய்யும் அலகுகளின் அளவு அதிகமாக இருப்பின் 10 வருடங்கள் வரை நிலுவை சந்தர்ப்பங்களில் அக்கணக்கில் சமனிலைப்படுத்தி தொடர முடியும். (Net Metering)

2

தங்கள் கூரையில் இணைக்கும் சூரிய பெனலினால் உற்பத்தி செய்யும் மின் அலகு அளவை வீட்டு உரிமையாளரினால் பாவிக்கப்படும் மின் அலகு அளவிற்கு கூடியது என்றால் மின்சார சபை வீட்டு உரிமையாளருக்கு மின் அலகு ஒன்றிற்கு முதல் 7 வருடங்கள் ரூ. 22.00/= ம் 8வது வருடம் முதல் ரூ 15.50/= ம் கொடுப்பனவாக‌ வழங்கும். வீட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார அளவு குறைவாக இருப்பின் வீட்டு உரிமையாளர் மின்சாரசபைக்கு கட்டணம் செலுத்துவர். (Net Accounting)

3

தங்கள் கூரையில் இணைக்கப்பட்ட சூரிய மின்சார உற்பத்தியினால் மின்சாரம் உற்பத்தி செய்யும் அலகு அளவிற்கு மின்சார சபையினால் வீட்டு உரிமையாளருக்கு கொடுப்பனவு வழங்கப்படும்.

வீட்டிற்கான மின்சார கட்டணத்தை வீட்டு உரிமையாளர் சபைக்கு செலுத்துவர். (Net Plus)

சூரிய சக்தி மூலம் உங்கள் வீட்டை அதிகரிக்க எங்களுக்கு உதவுங்கள்

நுகர்வு அலகுகள்
மாதாந்த மின்சாரம் பில்
கூடுதல் வருமானம்
முதலீட்டு திரும்ப

LECO நுகர்வோர்களுக்கு சூரிய கடன் திட்டங்கள் அறிமுகம்

LECO நுகர்வோர் சார்பில் 1 மில்லியன் ரூபா வரை சூரிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. முதல் 2000 வாடிக்கையாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள், எனவே இந்த வரையறுக்கப்பட்ட நேர வசதிகளை அனுபவிக்க இப்போது விண்ணப்பிக்கவும்.